2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

இ.தொ.காவின் காரியாலயம் தீக்கிரை

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

காவத்தை நகரில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் காரியாலயம், இன்று அதிகாலை தீக்கிரையாகியுள்ளதாக காவத்தை பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

மேற்படி காரியாலயம் தீப்பிடித்து எரிந்ததை கண்ட அயலவர்கள், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து மேற்படி இடத்துக்கு விஜயம்மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளருமான கணபதி இராமச்சந்திரன், மாநில இயக்குநர் எம்.ஏ.தங்கவேல், இரத்தினபுரி மாவட்ட வாலிபர் காங்கிரஸின் தலைவர் சுரேஷ், மாவட்ட பிரதிநிதி மகேந்திரன், மாவட்ட தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் இவ்விடயம் தொடர்பில் காவத்தை பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இ.தொ.காவின் உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன்,

'காவத்தை நகரில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலயம் இன்று(14) அதிகாலை 3 மணியளவில் தீக்கிரையாகியுள்ளது. இக்காரியாலயத்துக்கு தீமூட்டப்பட்டதா? அல்லது மின்சார கோளாறு காரணமாக தீப்பற்றியதா? என்பது தொடர்பில் இன்னும் கண்டறியப்படவில்லை.  

இக்காரியாலயம் கடந்த வருடமே திறந்து வைக்கப்பட்டது.  இச்சம்பவம் குறித்து இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் இ.தொ.காவின் தலைவர் முத்துசிவலிங்கம் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .