2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புல்தெனிய பிரதேசத்தில் சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியமையினால் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று திங்கட்கிழமை (18) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 63 வயதான கே.எப்.பியதாச என்பவரே உயிரிழந்துள்ளார். 

கத்திக்குத்துக்கு  இலக்கான நபர், கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  போது உயிரிழந்தார் எனவும் சகோதரனை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .