2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

முதியவர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு. இராமச்சந்திரன்

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர்  வட்டவளை வைத்தியசாலையிலிருந்து  காணமற்போனதாக கூறப்படும்  முதியவர் (வயது 72) வைத்தியசாலையின் புதருக்குள் இருந்து, நேற்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிஓயா மேற்பிரிவைச் சேர்ந்த முருகையா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, சிகிச்சைக்காக மேற்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காணாமல் போனார்.

இவரை தேடும்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையிலே, நேற்று மீட்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .