2021 மார்ச் 01, திங்கட்கிழமை

போதைப்பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புஸ்பராஜ்,டி.ஷங்கீதன்

தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை நுவரெலியா பொலிஸார் இன்று (22) கைதுசெய்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபர்கள் இருவரிடமிருந்தும் புகையிலை தூள் அடைக்கப்பட்ட 401 போதைப்பொருள் பக்கட்டுகள்   பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
 
நுவரெலியா பிரதேச வாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த சந்தேக நபர்கள்; இருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
 
அதிகளவு இப்போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
 
மேற்படி சந்தேக நபர்கள் இருவரையும் நுவரெலியா பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயசிங்க தெரிவித்தார்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .