2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

ஜீப்வண்டியின் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவர் கைது

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயணித்த ஜீப் வண்டியை சேதப்படுத்தியதாக கூறப்படும் இருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார், இன்று (23) கைது செய்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த அவ்விருவரும், ஜீப் வண்டியுடன் முச்சக்கர வண்டியை மோதவிட்டு, ஜீப் வண்டியை சேதப்படுத்தியுள்ளனர்.

கண்டி- குருநாகல் வீதியில் வைத்தே இச்சம்பவம் இன்று (23) இடம்பெற்றுள்ளது. மேற்படி இருவரும் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .