2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவக்காலம் 27 ஆம் திகதி ஆரம்பம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
சிவனொளிபாத மலைக்கான யாத்திரைப் பருவக்காலம் எதிர்வரும் 27 ஆம் திகதி  திகதி பூரணை தினத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக பெல்மதுளை இரஜமஹா விஹாரபதியும் ஸ்ரீபாத ஸ்தானதிபதியுமான வணக்கத்துக்குரிய தெங்கமுவ தம்பதின்ன தெரிவித்தார்.

இதனை முன்னிட்டு; இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்தாவெல ஸ்ரீபாத இரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன் தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரத பவனி எதிர்வரும் 26 ஆம் திகதி காலை பெல்மதுளை, இரத்தினபுரி, அவிசாவளை, கிதுல்கல, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாதமலையின் அடிவாரத்தினை அன்றைய தினம் இரவு வந்தடையும் என்றும் சமன் தேவ விக்கிரகமும் பூஜைப்பொருட்களும் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்ததன் பின்பு 27ஆம் திகதி அதிகாலையில் இடம்பெறவுள்ள விசேட பூஜைகளை தொடர்ந்து இவ்வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரை பருவக்காலம் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பமாகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ரதபவனியை வரவேற்பதற்கு வழமைப்போல விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிவனொளிபாதமலைப் பிரதேசத்தில் பொலித்தின் பாவனை, மதுபாவனை என்பன இம்முறையும் தடைசெய்யப்பட்டுள்ளதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிவனொளிபாதமலைக்கு வருகைத்தரவுள்ள யாத்திரீகர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்குவதற்கு ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் பிரிவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த யாத்திரீகர்களுக்காக ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து விசேட போக்குவரத்துச்சேவைகளை நலலத்தண்ணி நகர் வரை நடத்துவதற்கு ஹட்டன் பஸ் டிப்போ வழமைப்போல நடவடிக்கை எடுக்குமென்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹட்டன் டிக்கோயா நகரசபை, அம்பகமுவ பிரதேச சபை, இலங்கை மின்சார சபை உட்பட பல நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை வழமைப்போல் வழங்கவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .