2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

அக்குறணை சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுவதற்கு 29 வரை காலக்கெடு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை நகரில் சட்ட விரோத கட்டிடங்களை அகற்றுவதற்கு இம்மாதம் 29ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டிருப்பதாக அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம். சிம்ஸான் தெரிவித்தார்.

அக்குறணை பிரதேச செயலக கேற்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, கட்டிட உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்துறையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அக்குறணை நகரினூடாக ஓடும் பிங்காஒயா ஆற்றை தடைப்படுத்தும் விதத்தில் கட்டப்பட்டிருக்கும் அனைத்து கட்டிடங்களும் உடைக்க வேண்டும். வழங்கப்பட்ட காலவேளைக்குள் உடைக்கப்படாத கட்டிடங்களை அரசு முன்னின்று உடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உடைக்கப்பட்ட சில கட்டிடங்கள்  சம்பந்தமாக குறியீடு இடும் போது சில இடங்களில் அநீPதி இடம்பெற்றுள்ளதாக சில கட்டிட உறிமையாளர்கள் கூறிய கூற்றையடுத்து அவை மறு பரிசீலனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அங்கு கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--