2021 ஜனவரி 20, புதன்கிழமை

ஹேவோக்கா தோட்டத்தில் தீ; 3 வீடுகள் சேதம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 03 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெட்டிய ஹேவோக்கா தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் தற்காலிகமாக பிறிதொரு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இத்தோட்டத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், தொடர் வீட்டுத்தொகுதியில் 3 வீடுகள்; முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

தோட்ட மக்களும் நானுஓயா பொலிஸாரும் தீயை அணைத்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நுவரெலியா பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவப் பிரிவும் தோட்ட நிர்வாகமும் நிவாரணங்களை வழங்கியுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .