Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 09 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
( எஸ்.சுவர்ணஸ்ரீ )
நுவரெலியா மாவட்டத்தில் 32 வீதமானவர்கள் போசாக்கு குறைபாடுடையவர்களாக இனம் காணப்பட்டுள்ளதாகவும் இதனால் நிறை குறைந்த பிள்ளைகளின் பிறப்பு வீதம் அதிகரித்து காணப்படுவதாகவும் சுகாதார தரப்பினர் சுட்டிக் காட்டுகின்றனர்.
எமது நாட்டில் போசாக்கு குறைப்பாடு தேசியரீதியில் 15 வீதமாக காண்படுகின்ற போதிலும் தோட்டத்தொழிலாளர்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்ற நுவரெலியா மாவட்டத்திலே 32 வீதமாக இது அதிகரித்துக் காணப்படுகின்றது.
மாவட்டத்தில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் முறையான போசாக்கு தொடர்பான அறிவின்மை, போசாக்கு தொடர்பான செயற்றிட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படாமை, பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள் இந்த மாவட்டத்தில் அதிகமாக வாழ்கின்றமை, போசாக்குத் தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கைகள் தமிழ் மொழியில் இடம்பெறாமை, உரிய வழிகாட்டல்கள் இன்மை போன்ற காரணங்களாலே மத்திய மாகாணத்தில் போசாக்குக் குறைப்பாடுள்ளவர்கள் அதிகமாக காணப்படுவதாக அத்தரப்பினர் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தி அதற்கான தீரிவினை பெற்றுக்கொடுக்கும்படி கோரப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
44 minute ago
2 hours ago