Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தலவாக்கலை பிரதேசத்தில் நடத்தப்பட்ட விருந்துபசார நிகழ்வில் உணவு நஞ்சான சம்பவத்தினால் 592பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில், பாடசாலை அதிபர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான மெக்ஸி புரொக்டர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நுவரெலியா, லிந்துலை, கொட்டகலை, டிக்கோயா மற்றும் மஸ்கெலியா போன்ற வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அவர்கள் அனைவரும் மயக்கம், வாந்தி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (M.M)
7 minute ago
13 minute ago
15 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
15 minute ago
39 minute ago