Menaka Mookandi / 2011 ஜனவரி 09 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கணினி இயந்திரமொன்றுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் பாடசாலை மாணவர்பளுக்கு கஞ்சா போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் ஐவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு தலைமை தாங்குவதாகக் கூறப்படும் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞன், கட்டுகஸ்தோட்டை நகரில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து தனது நண்பர்களின் உதவியுடன் மேற்படி கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது மேற்படி இளைஞனுக்குச் சொந்தமான கணினிக்குள் இருந்து ஒரு தொகை கஞ்சா பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இன்று மாலை கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Nov 2025