Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 04 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.திருஞானம்
“ஜனவரி மாதம் அளவில் 50,000 வீடுகள் அமைப்பதற்கான அடித்தளம் போடப்படும்” என, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 4,000 வீடுகள் அமைப்பதற்கான செயற்றிட்டத்தில், இறம்பொடை - ஹெல்பொட தோட்டத்தில் 100 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம், நேற்று (03) நடைபெற்றது. இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“ஆரம்ப காலத்தில் மலையகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட நடேசன் ஐயர், கே. இராஜலிங்கம், வி.கே. வெள்ளையன் ஆகியோரைப் பற்றி யாரும் பேசுவதும் இல்லை, நினைவு கூருவதும் இல்லை. ஆனால், இவர்கள் தான் மலையத்தின் உண்மையான கதாநாயக தலைவர்கள்.
அவர்களிடம் பணம் இருக்கவில்லை. அதனால்தான் அரசியல் ரீதியாக முன்னோக்கி செல்ல முடியாமல் இருந்தது. அனால், அதற்கு பின்னர் வந்த தலைவர்கள் பணத்தை வைத்து விளையாட்டுகளை காட்டி, மக்களை முன்னேற்ற பாதைக்கு செல்லவிடாமல் லயத்து வாழ்க்கைக்கு அடிமையாக்கி சாக விட்டார்கள்.
அதற்கு பிறகு வந்த தலைவர்களில் அமரர் பெ.சந்திரசேகரன், மலையக மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக தனி வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்தார். மக்களின் வாழ்வில் உணர்வுபூர்வமாக செயற்படுவதற்கும் வழி வகுத்தார். அவரையும் நினைவு கூருவதை மறந்துவிட்டனர்” என்றார்.
மேலும், “எனது அமைச்சு பதவியைக்கொண்டு மலையக மக்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துவேன். தற்போது எனது அமைச்சின் ஊடாக ஏழு பேர்ச் காணி வழங்கி 3,000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த வீடுகள் மேலும் அதிகரிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடித்தளம் போட்டு இருக்கின்றார்” எனவும் தெரிவித்தார்.
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago