Gavitha / 2021 ஜனவரி 26 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
மனிதர்கள், மிருகங்களின் கழிவுகள் கலந்த நீரை, இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம நகர, கிராமப்புறங்களிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் அருந்துவதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சிங்கராஜ வனத்துக்கு எல்லையாகவும் இயற்கை வளங்கள் நீரூற்றுக்கள் அதிகம் காணப்படும் அயகம பிரதேசச் செயலகப் பிரிவில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையான மக்கள், இப்பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய கணக்கெடுப்பொன்றில், இப்பகுதியில் வசிக்கும் மக்களில் 90 சதவீதமானவர்கள், இந்த அசு த்தமான நீரை அருந்துவதாகவும் இப்பகுதி மக்களுக்கு குடிநீரை வழங்கும் 20 நீர் நிலைகளில், 18 நீர் நிலைகளில் இருந்து, அசுத்தமான நீர் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மலைப் பிரதேசங்களிலுள்ள இயற்கை நீரூற்றுக்களில் இருந்தே, இப்பகுதி மக்களுக்கான நீர் விநியோகம் வழங்கப்படுவதாகவும் இந்நீர் வளங்கள் சுத்திகரிக்கப்படுவதோ குளோரின் சேர்க்கப்படுவதோ இல்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்நிலைகளை அண்மித்து வாழும் குடியிறுப்புகளாலேயே, இந்த நீர் அசுத்தமாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றத.
எனவே, இதைக் கருத்தில் கொண்டு, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
9 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago