2021 மார்ச் 06, சனிக்கிழமை

இரண்டு நாள்களுக்கு மாமிசத் தடை

Gavitha   / 2021 ஜனவரி 12 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

தைப்பொங்கல் தினங்களான 14,15ஆம் திகதிகளில், இறைச்சி விற்பனையைத் தடை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், இந்த இரண்டு நாள்களிலும் இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுமாறு, பிரதேச சபை ஊடாக, இன்று (12) கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெற்று இயங்கும் ஆடு, மாடு இறைச்சி அறுப்பு நிலையங்கள், விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கே, இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது என, நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில், தைப்பொங்கல் தினத்தன்று, இறைச்சி அறுப்பு, விற்பனையைத் தடை செய்யுமாறு அரசாங்கம்  அறிவிக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .