Editorial / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி பிரதேசத்துக்கு, மிகவும் அவசியத் தேவையாகக் காணப்படும் புற்றுநோய் வைத்தியசாலையொன்று நிறுவப்படும் என, பொருளாதார மற்றும் கொள்கை அமுலாக்கல் அமைச்சரும் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டபிள்யூ.டீ.ஜே.ச.செனவிரத்ன தெரிவித்தார்.
இரத்தினபுரி, தெப்பனாவ பிரதேசத்தில், நேற்று (18) நடைபெற்ற கட்சி ஆதரவாளர்கள், கிராமியத் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர், இந்த வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்திப் பணிகளை, நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் இது, மிகவும் வேதனைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட அனைத்து அபிவிருத்திப் பணிகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026