2021 மார்ச் 06, சனிக்கிழமை

இரத்தினபுரி மேலும் நால்வருக்கு தொற்று

Gavitha   / 2021 ஜனவரி 18 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி போதான வைத்தியசாலையில், மேலும் 2 வைத்தியர்கள் 2 ஊழியர்கள் என, மொத்தம், 4 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என, வைத்தியசாலை நிர்வாகம், நேற்று முன்தினம் (17) உறுதிப்படுத்தியது.

இந்த நால்வரும், தற்போது கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இரத்தினபுரி போதான வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள், வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு, தினசரி ரெபிட் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி வைத்தியசாலையில், இதுவரைக்கும் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .