Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 மே 21 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரியில் ஒரு சில தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இம்மாதத்துக்கான சம்பளம் வழங்கப்பட வில்லை என்று ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேற்படி மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்று 20ஆம் திகதி சம்பளம் வழங்கப்பட்டது. எனினும், இரத்தினபுரி நகரை அண்மித்த ஒருசில தமிழ் பாடசாலைகளில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் விடயத்தில் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர் அக்கறைக்கொள்ளவில்லை என்றும் சம்பந்தப்பட்ட பாடசாலை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த பாடசாலைகளுக்கு கல்வி காரியாலயத்திலிருந்து சம்பள பட்டியல் நேரகாலத்தோடு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் அதிபரின் அசமந்தபோக்கின் காரணத்தால் குறித்த திகதியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் சித்திரை புத்தாண்டுக்கு முன்பு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டதால் இம்மாத சம்பளம் குறித்த திகதியில் கிடைக்கும் என்று எதிர்பாத்திருந்த போதிலும் அது இழுப்பறி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால், குறித்த பாடசாலை ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதோடு வெளி மாவட்டங்களிலிருந்து இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தாம் தங்கி இருக்கும் வீடுகளுக்கு குறித்த திகதியில் வாடகை செலுத்த முடியாமல் கஷ்டப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது மாணவர்களுக்கு மட்டுமே தவிர ஆசிரியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அல்ல. எனவே, இது குறித்து சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ் கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.
34 minute ago
38 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
38 minute ago
53 minute ago
1 hours ago