2020 மே 29, வெள்ளிக்கிழமை

‘ஐ.எஸ்’ தம்பிக்கு ஹட்டனில் பிணை

Editorial   / 2019 மே 03 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ், எஸ்.கணேசன்

யேமனில் வசித்துவரும் ‘ஐ.எஸ்’ இயக்கத்தின் உறுப்பினரான ஹட்டனைச் சேர்ந்தவரின் சகோதரொருவர், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தினால், நேற்று (02) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சகோதரரின் வீட்டிலிருந்து ஒன்பது கத்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளன எனத் தெரிவித்த ஹட்டன் பொலிஸார், ‘ஐ.எஸ்’ உறுப்பினர், இறுதியாக 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளார் என்றும், யேமனிலேயே தற்​போதும் வசித்துவருகிறார் என்றும் விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து ஹட்டன்-மல்லியப்பு பிரதேசத்திலுள்ள வீட்டை, ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எம்.ஜெமில் தலைமையிலான குழுவினர் சுற்றி​வளைத்து தேடுதல் நடத்தியபோதே, வீட்டின் களஞ்சிய அறையிலிருந்து, கத்திகள் மீட்கப்பட்டன. வீட்டிலிருந்தவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட, ‘ஐ.எஸ்’ இயக்கத்தின் உறுப்பினரின் சகோதரர், ஹட்டன் மாவட்ட நீதவான் ட்ரொக்ஸி முன்னிலையில், நேற்று (02) ஆஜர்படுத்தப்பட்டார்.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் கையொப்பமிடுமாறு நிபந்தனை விதித்த நீதவான், சந்தேகநபரை 20 இலட்சம் ரூபாய் சரீர​ப் பிணையில் விடுவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X