2021 மார்ச் 06, சனிக்கிழமை

கண்டி மஹியாவவுக்கு எப்போது விடுதலை?

Kogilavani   / 2021 ஜனவரி 08 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

கண்டி - மஹியாவ பிரதேசம், ஒரு மாத காலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், எப்போது இப்பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் எனவும் கேள்வி எழுப்பினார். 

புகையிலை வரி, புலமைச் சொத்து திருத்தச் சட்டமூலங்கள் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பெருந்தோட்டக் காணிகள், வேகமாக தனியாருக்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. தொழில் அமைச்சரின் நாடாளுமன்ற உரையைப் பார்க்கும்போது. ஆயிரம் ரூபாயை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான தேவையிருப்பதாகத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது' என்றார். 

'கண்டியில் உள்ள மஹியாவ பிரதேசம், டிசெம்பர் 8ஆம் திகதியிலிருந்து முடக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தை தனிமைப்படுத்தலிலிருந்து விடுப்பதற்கு முறையானத் திட்டங்கள் இல்லை. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். ஒரு திட்டத்தை வகுத்து அந்த மக்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள கர்ப்பிணிகளை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முடியாத நிலை உள்ளது. ஒரு பெண்ணின் சிசு உயிரிழந்துள்ளதோடு, அப்பெண்னின் நிலைமை மோசமாக உள்ளது' என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .