2021 மார்ச் 01, திங்கட்கிழமை

கறிக்கு கத்திச் சண்டை

Gavitha   / 2021 ஜனவரி 12 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவீ

தனது அனுமதியைப் பெறாமல், இடியாப்பம் சாப்பிடுவதற்காக கறி எடுத்த தனது மாமியாரை, கத்தியைக் கொண்டு மிரட்டிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு, 5,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ள கம்பளை நீதிமன்ற நீதவான், ஆசிரியைக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவத்தால் காயமடைந்த மாமினார், கம்பளை நகரிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுள்ளார்.

கம்பளை, சிங்காப்பிட்டிய பகுதியிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும் இந்தச் சம்பவம் சில நாள்களுக்கு முன்னர் நடைபெற்றபோது, ஆசிரியையின் 9,10 வயது பிள்ளைகளில், தனது தாய்க்குத் தெரியாமல் இதை வீடியோ எடுத்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில், காயமடைந்த மாமியாரின் மகள், இந்தக் காணொளியைக் கண்டு, அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதையடுத்தே, இப்பெண் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .