2020 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

கால்பாந்தாட்ட போட்டிக்குத் தடை; விளையாட்டு மைதானத்துக்குப் பூட்டு

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா நகரிலுள்ள விளையாட்டு மைதானத்தில், இன்று (9) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைப்பதற்காக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் வருகை தரவிருந்தபோதிலும், அந்தப் போட்டியை நடத்தவிடாது, மைதானத்தின் நுழைவாயிலை, மஸ்கெலியா பிரதேச சபை நேற்று (8) பூட்டிவிட்டதாக, பிரதேச விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர்.

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் இதனால், பிரதேச விளையாட்டு வீரர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி மைதானத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக, முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஊடாக 50 இலட்சம் ரூபாய் நிதி, ஒதுக்கப்பட்டு புனரமைப்புப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் மேற்படி மைதானத்தில், கால்பந்தாட்டப் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும் அந்தப் போட்டியின் ஆரம்ப நிகழ்வுக்கு, முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அழைக்கப்பட்டிருந்தை அறிந்து கொண்டே, மஸ்கெலியா பிரதேச சபை, மைதானத்தின் நுளைவாயிலைப் பூட்டியுள்ளதாகவும் பிரதேசமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்விடயம் குறித்து, மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் ஜீ.சென்பகவல்லியை தொடர்புகொண்டு கேட்டபோது, விளையாட்டு மைதானத்தின் புனரமைப்புப் பணிகள், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் ஊடாகவே, முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் இதுவரையிலும் பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் ஊடாக, குறித்த மைதானம் தன்னிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த மைதானத்தில், கால்பந்தாட்டப் போட்டி ஒன்று நடத்தப்பட வேண்டுமாக இருந்தால், மஸ்கெலியா பிரதேச சபையிடம் அனுமதிப் பெற்றிருக்க வேண்டும் என்றும் இதுபோன்ற சட்டதிட்டங்களைக் கடைபிடிக்காமல், தன்மீது குற்றச்சாட்டுகள் முன்வைப்பதை தான் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்த அவர், தாமே விளையாட்டு மைத்தனத்தின் நுழைவாயிலைப் பூட்டியதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .