2021 மார்ச் 06, சனிக்கிழமை

கொழுந்து நிறுவையில் மோசடி

Editorial   / 2019 நவம்பர் 06 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

 

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட எல்பியன் ஆட்லோ தோட்டத்தில், இதுவரை காலமும் கொழுந்து நிறுவையில் மேற்கொள்ளப்பட்டு வந்த மோசடி நடவடிக்கை, மத்திய மாகாண சபையின் உறுப்பினர் பி.சக்திவேலின் முயற்சியால் வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.

மேற்படித் தோட்டத்தில், கொழுந்து நிறுவையில் மோசடி செய்யப்படுவதாக, மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அவர் நேற்று (6) கொழுந்து நிறுக்கும் இடத்துக்கு நேரடி விஜயம் மேற்கொண்டதுடன், அளக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை கையுமெய்யுமாக பிடித்துக்கொண்டார்.

தராசில் நிறுவைக்கு 1 கிலோகொழுந்து பிடிக்கும்பட்சத்தில் இத்தோட்டத்தில் இரண்டு கிலோ கொழுந்து பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .