2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

திகனையில் 5ஆவது நிலநடுக்கம் பதிவு

R.Maheshwary   / 2020 நவம்பர் 30 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி-திகன பிரதேசத்தில் நேற்று இரவு சிறியளவு நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

பள்ளேகல மற்றும் மஹகந்தராவ நில அதிர்வு மத்திய நிலையங்களில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கமானது திகன, அம்பகோட்டே மற்றும் அளுத்வத்த ஆகிய பிரதேசங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் இன்று வரையான 3 மாதங்களுக்குள் 5 தடவைகள் சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் கண்டி, குருதெனிய, ரஜவெல, தலாத்துஓயாவுக்கு அண்மித்த பாரகம,அநுரகம ஆகிய இடங்களில் இது உணரப்பட்டதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .