2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு ஒவ்வாமை

Gavitha   / 2021 பெப்ரவரி 04 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளை அரசினர் வைத்தியசாலை ஊழியர்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியால், சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது என்றும் இவர்கள், அதே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு, தடுப்பூசி ஏற்றப்பட்டதும் அவர்களுக்கு மயக்கமும், வாந்தியும் ஏற்பட்டது என்றும் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக, அதே வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆர்.சி.கே. மாப்பாவைச் சந்தித்து வினவியபோது, ஊடகங்களுக்கு கருத்துக்கூற அவர் மறுத்துவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .