2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

‘தமிழக மீனவர்கள் உயிரிழப்பு கொலையா, விபத்தா?’

Gavitha   / 2021 ஜனவரி 24 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தியாகு 

தமிழக மீனவர்களின் உயிரிழப்பு, கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், இந்திய மீனவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தார்கள், இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படல் வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் உயிரிழப்பு தொடர்பில், இலங்கை அரசாங்கம் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் இல்லையெனில், இந்தச் சம்பவம், இலங்கை – இந்திய உறவில் பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு இநீதி இழைக்கப்படும் அனைத்து நேரத்திலும் இந்திய அரசாங்கம் குரல் கொடுத்தது என்றும் எனவே, அந்நாட்டுக்கு ஒரு அநீதி இழைக்கப்படும்போது, அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவேண்டியது தங்களது பொறுப்பு என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .