2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

தெரணியகல பிரதேச சபையின் நிதி அறிக்கை நிறைவேற்றம்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 16 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராய்ச்சி

தெரணியகல பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை, இரண்டு மேலதிக வாக்குகளால், நேற்று (15)  நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேற்படி பிரதேச சபையின் நிதி அறிக்கை, சபையின் தவிசாளர் லக்ஷ்மன் ராஜகருணா தலைமையில், சபையில், நேற்று (14) முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது.

நிதி அறிக்கைக்கான வாக்களிப்பு நேற்று (16) நடைபெற்ற நிலையில், சபையின் தவிசாளர் உள்ளடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் 8 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரண்டு உறுப்பினர்களும் சுயேச்சை உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 8 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணியின் ஒரு உறுப்பினரும் எதிராக வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டு மேலதிக வாக்குகளால் நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--