2021 மார்ச் 06, சனிக்கிழமை

தொழிலாளர்களுக்கு ரூ.1,105 வழங்கும் திட்டம்

Gavitha   / 2021 ஜனவரி 17 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் துறைக்கான நிலையான வருமானத்துக்கான வரைவு மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், தோட்டத் தொழிலாளர்களின் தொழில், வாழ்வாதாரத்தின் நிலையான தன்மையை உறுதிப்படுத்துகின்றது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பிலேயே, இத்திட்டம் முன்மொழியப்பட்டள்ளது.  

இந்த புதிய நிதி திட்ட வரைவுக்கமைய, பெருந்தோட்ட கம்பனிகள் நாளாந்தம் நிலையான சம்பளமாக ரூ.1,105ஐ நிர்ணயித்துள்ளன. அத்துடன் நாளாந்த வருகை, உற்பத்தித்திறன் ஊக்கங்களை மீள அறிமுகப்படுத்தியுள்ளன. இவற்றை, தொழிற்சங்கங்கள் முன்னர் எதிர்த்தபோதும், சமீப காலமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் விளைவாக தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் மாற்றியுள்ளன.

இதன் பிரகாரம், அடிப்படை சம்பளம் ரூ. 700, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி (EPF/ETF) - ரூ. 105, வருகை ஊக்குவிப்புத் தொகை - ரூ. 150, உற்பத்தித்திறன் ஊக்குவிப்புத் தொகை - ரூ. 150 என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு மாதாந்தம் ரூ.6,250 அதிகரிக்கப்பட்ட தொகை கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட நாள் சம்பள மாதிரிக்கு மேலதிகமாக, தொழிலாளர்களுக்கு இறுதியாக பயனுள்ள ஊக்கத்தொகைகள் வழங்கப்படுவதையும் அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் வெகுமதி பெறுவதையும் உறுதி செய்வதற்காக உற்பத்தித்திறன் - இணைக்கப்பட்ட வருமானம் ஈட்டும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் பரிந்துரைத்துள்ளன. 

முன்மொழியப்பட்ட நிலையான நாளாந்த சம்பள மாதிரி, வாரத்தில் 3 நாள்களுக்குச் செயற்படுத்தப்படும். ஏனைய நாள்களில் அவை இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் முன்வைக்கும் தனித் திறன் சார்ந்த இரண்டில் ஒன்றை அடைவதன் ஊடாக தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமான ரூ.1,105 ஐ விட அதிகம் வருமானத்தை அடையலாம்.    

உற்பத்தித்திறன் - இணைக்கப்பட்ட கூறுகளின் கீழ், ஊழியர்கள் பறித்த ஒவ்வொரு கிலோ தேயிலைக்கும் ரூ. 50 (EPF/ETF உட்பட) தொகையையும் இறப்பரை பொறுத்தமட்டில் ஒரு கிலோ இறப்பருக்கு ரூ. 125 (EPF/ETF   உட்பட) வழங்கப்படுகின்றது. 

மாற்றுத் திட்டமாக இலங்கையில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர் துறையில் வெற்றியுடன் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளதைப் போலவே, அதிக வருமானத்தை வழங்கும், வருமான பகிரக்கூடிய மாதிரியின் அடிப்படையில் ஊழியர்கள் ஊதியம் பெறுவார்கள். இந்த இரண்டு மாதிரிகளையும் தொடர விரும்பாத நிறுவனங்கள், நிலையான நாளாந்த சம்பள முறையைத் தொடர உரிமையை (தங்கள் விருப்பப்படி) வழங்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .