2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

நுவரெலியாவில் தேசிய மீலாத் தின விழா

Kogilavani   / 2021 மார்ச் 05 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன், ஆர்.ரமேஸ்

2021 தேசிய மீலாத் தின விழா,  நுவரெலியா மாவட்டத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்  மேற்கொண்டுள்ளது. 

இந்த மீலாத் விழா ஏற்பாட்டுக்குழுவின் முதலாவது கூட்டம், நேற்று (4) நுவரெலியா  மாவட்டச் செயலகத்தில், முஸ்லீம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அத்தியட்சகர் ஏ. பி. எம். அஸ்ரப் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சரும் நுவரெலியா மாவட்ட  அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவர் எஸ்.பி.திஸாநாயக்க, நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் மஹிந்த தொடம்பே கமகே, முன்னாள் நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் ஹல்ஹாஜ்  எம். எம். பளீல், புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு மேதிக செயலாளர் திருமதி ரேணுக்கா அமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  
இதன்போது உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க,  ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக, இம்முறை தேசிய மீலாத்தின விழா நுவரெலியாவில் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ, நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கலந்துகொள்வர் என்றார்.

மீலாத் விழாவை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் மரக்கன்று நாடுதல்,  பள்ளிவாயல் ஒன்றை புனரமைத்தல், வறுமையான 100 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுத்தல், நுவரெலியா மாவட்டத்தில் ஒப்பனை இல்லாத அனைத்துப் பள்ளிகளுக்கும்  ஒப்பனைகளைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் முத்திரை ஒன்றும் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

முஸ்லிம் கலாசாரம் தொடர்பான சரித்திரப் புத்தகமும் 2021 தேசிய மீலாத் விழா சிறப்பு மலரும் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, முஸ்லிம் கலாசாரம் தொடர்பான கண்காட்சியும் கலைநிகழ்வுகளும் இடம்பறவுள்ளன என்று தெரிவித்ததுடன், நிகழ்வுகளை நடத்துவதற்கு செயற்பாட்டு குழுக்கள் அமைக்கப்படவுள்ளன என்றும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .