2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

’நிருத்தம்’ கலைக் கொண்டாட்டம்

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூட்ஸ் ஒஃப் லங்கா பவுண்டேஷனும், அருட்கரமும் இணைந்து நடத்தும், “நிருத்தம்” எனும் தொனிப்பொருளிலான கலைக் கொண்டாட்டம், எதிர்வரம் 15ஆம் திகதி காலை 9 மணிக்கு, ஹட்டன் மாநகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதில், பரதம், காவடி, கும்பி, மயிலாட்டம், கரகம்,  தப்பாட்டம், சிலம்பாட்டம் போன்ற பாரமபரிய கலைகள் குறிக்கும் போட்டிகள் ​அனைத்தும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.

எனவே, நுவரெலியா, ஹட்டன், பதுளையைச் சேர்ந்த போட்டியாளர்கள், சமகாலத்துக்கு ஏற்ற, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் விதத்திலும் திறமைகளை வௌிப்படுத்தலாம் என,  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப் போட்டிகளில், 15க்கும் 35க்கும் இடைப்பட்ட ஆண், பெண் ஆகிய இருபாலரும் பங்கேற்க முடியும் என்றும் இது தொடர்புடைய மேலதிக விவரங்களை, 071-5544757/ 071-7478283/ 075 - 8253642 எனும் அலைபேசி இலக்கங்களூடாகவோ, rootsoflanka@gmail.com எனும்  மின்னஞ்சல் முகவரியூடாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--