2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பசறையில் இரண்டு மாணவர்களுக்குத் தொற்று

Gavitha   / 2021 ஜனவரி 18 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை நகரிலுள்ள பாடசாலையொன்றில், இரண்டு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என, பசறை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அறிவித்துள்ளது.

சுதந்திர தின கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக தயாராகி வந்த இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இவர்களுடன் தொடர்பைப் பேணி வந்த 78 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், பசறை அம்மனிவத்தை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .