2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

மஸ்கெலியாவில் 26 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

Kogilavani   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி பிரிவில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 26 பேருக்கு, இன்று (25) மாலை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்தியர்களுடன்  தொற்று நோய் பிரிவின் விஷேட நிபுணர்கள் பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்டனர்.

பேலியாகொட மீன் சந்தையில் பணியாற்றிவந்த மஸ்கெலியாவைச் சேர்ந்த நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினரும் அவருடன் தொடர்பைப் பேணியவர்களுமாக 26 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களுக்கே பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .