2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

மஸ்கெலியாவுக்கு பாதுகாப்பும் வெளிச்சமும்

செ.தி.பெருமாள்   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா நகரின் பாதுகாப்புக்காகவும் இரவு நேரங்களில் பஸ்களில் பயணம் செய்வோரின் நலன் கருதியும், மஸ்கெலியா பிரதேச சபையால், நவீன வீதி விளக்குகள், கண்காணிப்புக் கமெராக்கள் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வேலைத்திட்டத்தால், மஸ்கெலியா நகருக்கு இரவு நேரங்களில் வருவோர் அச்சமின்றி இருக்க முடியும் என்றும் அத்துடன், வடிகான்களில் குப்பைகள் வீசுவோரின் எண்ணிக்கை, இந்தக் கண்காணிப்பு கமெராக்கல் மூலம் குறைக்கப்படும் என்று, மஸ்கெலியா பிரதேச சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த நவீன வீதி விளக்குகள், நகரத்தில் மாத்திரமல்லாது, தோட்டங்களின் முக்கிய இடங்களிலும் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--