2021 மார்ச் 03, புதன்கிழமை

ரூ.1,000 அதிகரிப்பில் சுற்றுகிறது பந்து

Editorial   / 2021 ஜனவரி 13 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

    மகேஸ்வரி விஜயனந்தன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு, ஜனவரி மாதத்திலிருந்து கிடைக்குமென, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வாசிப்பின் போது அறிவித்திருந்தார்.

எனினும், பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில், கொள்கை ரீதியான தீர்மானத்தை மட்டுமே எடுக்கமுடியுமென அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது,

 வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்றது. அதில், பங்கேற்றிருந்த ஊடகவியலாளர்களில் ஒருவர், 'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென அறிவித்திருந்தீர்கள், ஆனால் இன்னும் கிடைக்கவில்லை. இந்த விடயத்திலும் அரசாங்கம் 'பெயில்' எந்த சந்தேகம் வலுப்பெற்றுள்ளது' எனக் குறிப்பிட்டு, சம்பள விடயம் தொடர்பில் கேள்வியெழுப்பினார்.

 அதற்குப் பதிலளித்த, அமைச்சரவையின் இணைப்பேச்சாளர்களில் ஒருவரான உதய கம்பன்பில,  'சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள், பெருந்தோட்ட நிறுவனங்கள், அரசாங்கம் சார்பாக தொழில் அமைச்சர் அடங்கலாக முத்தரப்புக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை, தொழில் அமைச்சர் நாட்டுக்கு அறிவிப்பார்' என்றார்.  

கேள்வி:  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இந்தக் கூட்டொப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், யார் இதற்கான பொறுப்பை ஏற்பது?

பெருந்தோட்ட மக்களின் அடிப்படைச்  சம்பளம் தொடர்பான பொறுப்பு, அதிகாரம்  ஆகியவற்றை, அரசாங்கம் தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வாவுக்கே வழங்கியுள்ளது.

பேச்சுவார்த்தையின் நிலை என்ன என்பது தொடர்பில், அமைச்சரவைக்கு அவரே பத்திரம் சமர்ப்பிப்பார். எனவே, தொழில் அமைச்சர், இறுதித் தீர்மானத்தை அறிவிக்கும் வரை, அது தொடர்பான மேலதிக தகவல்களை அவரால் மாத்திரமே வழங்க முடியும். ஏனெனில், அவரே அரசாங்கத்தின் பிரதிநிதியாக இப்பேச்சுவார்த்தையை முன்னெடுக்கிறார்;  தலைமையும் வகிக்கின்றார் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .