2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

ரூ.1,000க்காக ஹட்டனில் மீண்டும் போராட்டம்

Kogilavani   / 2021 ஜனவரி 12 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தி, பெருந்தோட்டத் தொழிலாளர் வேதன உரிமக்கான இயக்கம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, ஹட்டன் நகரில் மீண்டும் ஒரு போட்டத்தை நடத்தவுள்ளது.

மேற்படி அமைப்பானது, ஏற்கெனவே மஸ்கெலியாவில் கடந்த 6ஆம் திகதி போராட்டத்தை நடத்தியிருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஹட்டனில் தனது போராட்டத்தை நடத்தவுள்ளது. 

இந்தப் போராட்டத்தில் 18 பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என்று, மேற்படி இயக்கத்தின் பிரதானச் செயற்பாட்டாளர் தங்கவேல் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயும் 25 நாட்கள் தொழிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

அத்துடன் ஆயிரம் ரூபாய் விடயத்தில், அரசாங்கம், பெருந்தோட்டக் கம்பனிகள், கூட்டுஒப்பந்தம் செய்யும் தொழிற்சங்கங்களுக்கு மீண்டும்மீண்டும் அழுத்தம் கொடுக்கும் வகையில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .