2025 ஜூலை 12, சனிக்கிழமை

வீசாயின்றி நோர்வூட்டில் தங்கியிருந்தவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

வீசா இன்றி நோர்வூட் பிரதேசத்தில் தங்கியிருந்த இந்தியப் பிரஜையை இந்த மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்  இன்று (14) கைதுசெய்யப்பட்டு, ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.ட்ரொஸ்கி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

34 வயதுடைய குறித்த நபர் 2009ஆம் ஆண்டு கட்டாரில் பணிபுரியச் சென்ற போது, அங்கு நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தைச் சேர்ந்த யுவதியொருரைக் காதலித்து, 2015ஆம் ஆண்டு இலங்கை வந்து காதலித்த யுவதியை திருமணம் முடித்துள்ளார்.

குறித்த யுவதியை திருமணம் முடித்த பின்பு இவர் தனது வீசாவைப் புதுபித்து வந்துள்ள நிலையில், 2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவர் தனது வீசாவை புதுப்பிக்கவில்லை என்பதுடன், இவரது கடவுச்சீட்டும் 2015ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளது.

இந்த நிலையிலேயே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .