2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வடக்கு, மேற்கு, மலையகத்தில் தனித்தும் சேர்ந்தும் சேவல் கூவும்

Kogilavani   / 2017 டிசெம்பர் 07 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில், சில பகுதிகளில் தனித்தும் சில பகுதிகளில் ஏனையக் கட்சிகளுடன் கூட்டாகவும் இணைந்தும் போட்டியிடவுள்ளதாக, மத்திய மாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறியதாவது,

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது, எதிர்வரும் உள்ராட்சிமன்றத் தேர்தலில், சில தொகுதிகளில் தனித்து தனது சேவல் சின்னத்திலும் சில பகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து கூட்டாகவும் போட்டியிடவுள்ளது.

“இதற்கமைவாக, நுவரெலியா- மஸ்கெலியா தேர்தல் தொகுதியிலுள்ள சகல உள்ராட்சிமன்றங்களிலும் அதேபோன்று, கண்டி- பன்வில பிரதேச சபை, மாத்தளை மாநகர சபை, ரத்தொட்டை பிரதேச சபை ஆகியவற்றில்  தனித்து சேவல் சின்னத்தில் இ.தொ.கா போட்டியிடவுள்ளது.

“கண்டி, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில், ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துப் போட்டியிடவுள்ளது.

“கொழும்பு மாநகர சபையிலும், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸடன் இணைந்து, சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

“உள்ளூராட்மன்றங்களில் ஏனையக் கட்சிகளுடன் இணைந்துப் போட்டியிடுவது தொடர்பிலான மேல்மட்ட முடிவுகள் அனைத்தும் எட்டப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடுகளில் குளறுபடி நிலவுவதால், அது தொடர்பில், பேசித் தீர்மானிக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .