Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2021 ஜனவரி 12 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா, மவுசாகலை தோட்ட சீர்பாத பிரிவைச் சேர்ந்த சிதம்பரம் ருக்மணி எனும் 65 வயது வயோதிபப் பெண்ணை, கடந்த 9ஆம் திகதி முதல் காணவில்லை என்று, அவரது சகோதரர், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பெண், கடந்த 9ஆம் திகதி காலை 9 மணியளவில், கொட்டகலைக்குச் செல்வதாகவும் அங்கு ஒருவருக்கு பணம் கொடுக்கவேண்டும் என்று கூறி, வீட்டில் இருந்து சென்றார் என்றும் வங்கியில் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றவர் தொடர்பில் இதுவரைக்கும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்றும் தெரியவருகின்றது.
எனவே, இந்த வயோதிபப் பெண்ணை எங்கு கண்டாலும், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கோ தெரியப்படுத்துமாறும் அப்படி இல்லையெனில், 052-2277222, 071-8230023, 075-5590000 என்ற அலைபேசி இலக்கங்களுக்கோ தொடர்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .