2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தால் கொரோனா கால செய்கைகளும் நாசம்

Editorial   / 2020 மே 22 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்தில் நீடீத்த சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, நெல், மரக்கறி செய்கைகள் முற்றாகப் பாதிப்படைந்துள்ளன என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

குறிப்பாக கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தில், பொதுமக்கள், விவசாயிகள் பாரியளவில் நெல், மரக்கறிச் செய்கைகளில் ஈடுபட்டனர்.

இவ்வாறு செய்கைபன்னப்பட்ட பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தால் அழிவடைந்ததாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய அ மைப்புகளின் பிரதிநிதிகள், கிராம சேவை அதிகாரிகள் சப்ரகமுவ மாகாண கமநல சேவைகள் திணைக்களம்,  விவசாயத் திணைக்களம் என்பவற்றின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .