2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

’வாசனைப் பொருள்களின் இறக்குமதி தடையால் உள்நாட்டு விவசாயிகளுக்கு நன்மை’

மொஹொமட் ஆஸிக்   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிளகு, கருவாய் உள்ளிட்ட 9 வாசனைப் பொருள்களின் இறக்குமதியைத் தடை செய்ததன் காரணமாக, உள்நாட்டு விவசாயிகளின் பொருள்களுக்கு அதிக விலை கிடைக்க ஆரம்பித்துள்ளதாக, ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பீ.ஹீன்கெத்த தெரிவித்தார்.

பேரதனையில் அமைந்துள்ள ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தில், நேற்று (09), நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 5ஆம் திகதி, நிதியமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், மிளகு, கருவாய் உள்ளிட்ட 9 வாசனைப் பொருள்களின் இறக்குமதியும் அதன் மீள் ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டது என்றும் இதனால், வெளிநாடுகளில் உற்பத்தியாகும் வாசனைப் பொருள்கள், நாட்டுக்குள் வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள முக்கியமான தீர்மானமாக இதைக் கருதமுடியும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இந்த வகையான ​பொருள்கள் உயர் தரத்தை உடையவை என்று கூறிய அவர், இதனால், எமது நாட்டுப் பொருள்களுக்குக் கிடைக்கும் விலையும் அதிகம் என்றும் அவர் கூறினார்.

இப் பொருள்களின் இறக்குமதியைத் தடை செய்ததன் மூலம், உள்நாட்டு விவசாயிகளுக்கு தமது உற்பத்திகளுக்கு அதிக விலை கிடைக்க ஆரம்பித்துள்ளது என்றும் இவ்வாறு உள்நாட்டு உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் போது, விவசாயிகளின் பயிரிடும் ஆர்வமும் அதிகரிக்கும் என்றும் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--