2020 ஏப்ரல் 04, சனிக்கிழமை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து கருத்தரங்கு

எம். செல்வராஜா   / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையின் பெருந்தோட்டங்களில் உள்ள, படித்த, தொழிற்பயிற்சிகளை நிறைவு செய்த, திறமைமிக்க இளைஞர், யுவதிகளை, சர்வதேச நாடுகளில் கௌரவமான தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக தெளிவூட்டும் கருத்தரங்கு, ​நேற்று (08) நடைபெற்றது.

புலம்பெயர் தொழிலாளர் முன்னணியின் ஏற்பாட்டில், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பவர் பவுண்டேசன், கெரிடாஸ், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் ஆகியன இணைந்தே, இந்தத் தெளிவூட்டும் சேவையை நடத்தியிருந்தது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருப்போர், வெளிநாட்டில் குடும்ப உறுப்பினர்கள் இருப்பவர்கள், வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பியவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது பிரச்சினை எதிர்நோக்கியவர்கள் போன்றவர்களுக்கான ஆலோசனைகள் இதன்போது வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .