2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட மேலும் 38 மாணவர்கள் வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை, பன்விலதன்ன வித்தியாலயத்தைச் சேர்ந்த 38 மாணவர்கள் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடல் அரிப்பு, மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் சுமார் 7பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தை அடுத்து கம்பளை, உடபலாத்த பிரதேச சுகாதார பிரிவினர் குறித்த பாடசாலைக்குச் சென்று பரிசோதனைகளை நடத்தியுள்ளனர். இருப்பினும் இந்த ஒவ்வாமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

கம்பளை ஜினராஜ கல்லூரியிலும் நேற்றைய தினம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் இவ்வாறானதொரு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .