2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

1,108 ரூபாய் நாள் சம்பளத்துக்கு அமைச்சர் பச்சைக்கொடி

Editorial   / 2021 பெப்ரவரி 03 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தொழில் அமைச்சர் நிமல் சி‌றிபால டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCS) நாளொன்றுக்கு 1,108 ரூபாய் வரையிலும் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பளமாக வழங்குவதற்கான திருத்தப்பட்ட ஊதிய முன்மொழிவை சமர்ப்பித்துள்ளன என, அந்த நிறுவனங்களின் கூட்டமைப்பு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

திருத்தப்பட்ட முன்மொழிவானது தொழில் அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட தீர்வின் விளைவாகும். எனினும், தொழிற்சங்கங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்மானம் தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான 1,000 ரூபாயை விட. அதிகமான வருவாயைப் பெற்றுக் கொள்ளக் கூடியதை உறுதி செய்வதுடன், மேலும் இறுதியாக உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான வெகுமதியையும் அளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1,108 ரூபாய் நாள் சம்பளம் பின்வரும் முறைமை அடிப்படையாகக் கொண்டது எனக் குறிப்பிட்டுள்ள பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள், அதில் அடிப்படைச் சம்பளம் 725 ரூபாய், விலை பங்கு துணை 50 ரூபாய், ஊழியர் சேமலாப நிதி / ஊழியர் நம்பிக்கை நிதி (EPF/ETF)) 108 ரூபாய், வருகை மற்றும் உற்பத்தித் திறன் ஊக்குவிப்புத் தொகை 225 ரூபாயும் இந்தப் புதிய ஊதிய முன்மொழிவு யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒரு நிலையான தினசரி ஊதிய மாதிரியானது வாரத்தில் 3 நாள்களுக்குப் பொருந்தும். மீதமுள்ள நாள்களில் உற்பத்தித் திறனுடன் இணைக்கப்பட்ட இரண்டு வருவாயை அதிகரிக்கும் மாதிரிகளில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்கள் ஊதியம் பெறுவார்கள் 
அதில் ஒன்று, பறிக்கப்பட்ட ஒவ்வொரு கிலோ கிராம் தேயிலைக் கொழுந்துக்கும் ஊழியர்களுக்கு 50 ரூபாய் வழங்கப்படும். இரண்டாவது வருவாய், பங்கு மாதிரி; இதன் மூலம் ஊழியர்கள் தொழில் முனைவோராக முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .