2025 ஜூலை 12, சனிக்கிழமை

வாகன விபத்தில் பாடசாலை மாணவன் பலி

Super User   / 2010 டிசெம்பர் 11 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

கம்பளை நுவரெலியா வீதியில் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகில்  இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளான்.

கம்பளையில் இருந்து கொத்மலை நோக்கி சென்று கொண்டிருந்த லொறியில் மோதுண்டே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவனே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

இவரின் சடலம் தற்போது புசல்லாவ வவுகபிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புசல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .