2020 நவம்பர் 28, சனிக்கிழமை

தலதா மாளிகைக்கு சொந்தமான காணியில் மரங்களை வெட்டிய ஐவர் கைது

Super User   / 2011 ஜனவரி 20 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)


பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெகொட கலுகமுவ பகுதியில்  தலதா மாளிகைக்கு சொந்தமான காணியில் ஒன்பது பலா மரங்கள் உட்பட இருபது மரங்களை சட்ட விரோதமாக வெட்டிய ஐவரை பேராதனை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

இங்கு வெட்டப்பட்ட மரங்களின் பெறுமதி 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமானதாகும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்  இந்நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட லொறியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பான விசாரனைகள் பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜாலிய ஹீன்கந்த தலைமையில் இடம் பெறுகின்றன.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--