2020 நவம்பர் 28, சனிக்கிழமை

சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

Super User   / 2013 ஜூலை 30 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நுவரெலியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று பிரதேச சபை கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச சபையின் தலைவர் என்.சதாசிவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் ராஜாராம் பிரதேச சபை உறுப்பினர் சரத் இத் திட்டத்திற்கான அனுசரணையாளாகள் சார்பாக ரொஜர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது 20 பிரதேசங்கள் தொடர்பாக முதல் கட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதோடு இதனை தொடர்ந்து நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதேச சபை தலைவர் குறிப்பிடுகின்றார்.

இதனைத் தொடர்ந்து 20ஆவது சமூக நீர் வழங்கல் திட்ட அமைப்புகளுக்கு இலவசமாக தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரமும் வழங்கிவைக்கப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--