2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மல்வத்தவேலி பிளாண்டேசன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


மல்வத்தவேலி பிளாண்டேசனுக்கு உட்;பட்ட சப்புமல்கந்த, மொரலிஓய, தல்துவ, ருவான்வெல்ல ஆகிய தோட்டங்களில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்திசெய்யும் பொருட்டு பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

கால்நடை, அபிவிருத்தி அமைச்சு கேட்போர் கூடத்தில் இ.தொ.காவுக்கும் மல்வத்துவேலி பிளான்டேசனுக்கும் இடையில் இப்பேச்சுவார்த்தை இன்று  நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் இ.தொ.கா பொதுச்செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி  அமைச்சருமான முத்து சிவலிங்கம், தோட்டக்கம்பனி பணிப்பாளர்களும், குறித்த தோட்டங்களை சேர்ந்த தோட்ட தலைவர்களும், தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--