2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

நுவரெலியாவில் சீன பிரஜை உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த சீன பிரஜையான யூமன் சின் (வயது 36) என்பவர் சுகவீனமடைந்த நிலையில்  புதன்கிழமை (02) உயிரிழந்துள்ளதாக  நுவரெலியா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நுவரெலியாவுக்கு செவ்வாய்க்கிழமை (01) மாலை வந்த இவர், அங்குள்ள  உல்லாச விடுதியொன்றில்  தங்கியுள்ளார்.

இந்நிலையில், புதன்கிழமை (01)  தனது வழமையான கடமைகளை முடித்துக்கொண்டு நுவரெலியா நகரைச் சுற்றிப் பார்ப்பதற்கு இவர்  தயாரானபோது திடீரென்று சுகவீனமடைந்தார். இதனைத் தொடர்ந்து, இவரை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் விடுதி ஊழியர்கள் அனுமதித்தனர்.

இருப்பினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில்  இவரது  உயிர் பிரிந்திருந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இவர் அதிக புகைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்ததாக  வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம்  இலங்கையிலுள்ள சீன தூதரகத்திடம் ஒப்படைக்கப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X