2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஹட்டனில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

Thipaan   / 2014 ஒக்டோபர் 27 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஞ்சித் ராஜபக்ஷ


மலையகத்தில் தொடர்ந்தும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜ பகுதியில், இன்று(27) மாலை  பாரிய மண்சரிவு ஏற்பட்டது.

இந்த மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக, ஹட்டன் பொகவந்தலாவ மற்றும் ஹட்டன் மஸ்கெலியா ஆகிய இடங்களுக்கான போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.

தற்போது பாதையிலிருந்த மண்தடை அகற்றப்பட்டு ஒருவழி போக்குவரத்தாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முழுமையாக மண்தடையை அகற்ற நடவடிக்கை எடுத்திருப்பதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மலையகத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக வீதிகள் வழுக்கல் தன்மையுடன் காணப்படுகின்றமையால் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடதக்கது.

இதனால் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு வாகனசாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X