2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

உம்ரா வேலைத்திட்டம் தொடரும் மேலும் 400 பேர் விரைவில் பயணம்

Princiya Dixci   / 2016 மார்ச் 29 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
நாடாளாவிய ரீதியில் முஅத்;தீன்கள் மற்றும் இமாம்களுக்கான இலவச உம்றாவுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஹிரா பவுன்டேஷன் நிறுவனத்தின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
 
நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 100 பேர் கொண்ட முதல் குழு, நேற்று திங்கட்கிழமை (28) மாலை உம்ரா கடமைகளுக்காக மக்கா நோக்கிப் புறப்பட்டனர்.
 
அவர்களை வழியனுப்பி வைப்பதற்காக இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் கட்டுநாயக்க விமானநிலையத்துக்குச் சென்றிருந்தனர்.
 
இந்நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் 400 பேர் விரைவில் உம்ரா கடமைகளுக்காக மக்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
 
ஸ்ரீ லங்கா ஹிரா பவுன்டேஷன் ஏற்பாட்டில் 55 வயதுக்கு மேற்பட்ட முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் 500 பேருக்கு இலவச உம்ரா வேலைத்திட்டத்தில் இதுவரைக் காலமும் உம்ரா அல்லது ஹஜ் கடமையை செய்யாத உலமாக்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கு உம்ரா ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஹிரா பவுன்டேஷன் முன்வந்துள்ளது. இச்சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

தெரிவுசெய்யப்பட்ட 500 பேர்களில் முதல் 100 பேர் கொண்ட குழுவே புனித மக்கா நகர் நோக்கி செல்கின்றனர். மீதமுள்ள 400 பேரும் இன்னும் சில வாரங்களில் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத்தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .