2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

குளியலறைக்குள் பெண்ணை கட்டிப்பிடிக்க முற்பட்டவர் கைது

Princiya Dixci   / 2015 நவம்பர் 24 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் குளியலறைக்குள் ஆடையின்றி நுழைந்து, பெண்ணொருவரைக் கட்டிப்பிடிக்க முற்பட்ட நபரொருவர், இன்று செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த ஆடைத்தொழிற்சாலையின் பெண் ஊழியர் ஒருவரையே இந்நபர் இவ்வாறு கட்டிப்பிடிக்க முற்பட்டுள்ளார். 

பெண் ஊழியர் கூச்சலிட்டதனால் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக சந்தேகநபர்,மோட்டார் சைகளில் தப்பித்துச் சென்றுள்ளார்.

எனினும், தொழிற்சாலை ஊழியர்கள் தப்பித்துச்சென்ற சந்தேகநபரை, துரத்திப்பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். 

சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த நபர் உணவகமொன்றில் கொத்துப்போடும் ஊழியர் எனவும் இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. 

மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .